சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் பகுதியில் இன்று மதியம் 2:50 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
சத்தீஸ்கரின், இன்று நிலநடுக்கம் உணரப்பட்டது. சர்குஜா மாவட்டத்தில் உள்ள அம்பிகாபூர் அருகே இன்று மதியம் 2:50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி 4 கிலோ மீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், அம்பிகாபூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் குடியிருப்புகள் லேசாகக் குலுங்கின.
இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் உள்ள மக்களுக்கோ அல்லது கட்டிடங்களுக்கோ பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை எனத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.