யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய முதல் உலகத் தலைவர் என்ற பெருமையைப் பாரத பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி தனக்கென ஒரு தனிப்பட்ட யூடியூப் சேனலை வைத்துள்ளார். அதில் இதுவரை 23,000 காணொளிகளைப் பதிவிட்டுள்ளார்.
தற்போது இந்த சேனல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டியுள்ளது. இதன் மூலம் முதல் 2 கோடி சப்ஸ்கிரைபர்களை எட்டிய ஒரே உலகத் தலைவராகப் பாரத பிரதமர் விளங்குகிறார்.
அவரது யூ-டியூப் பக்கம் 450 கோடி பார்வைகளையும் ஈர்த்துள்ளது. பிரதமர் மோடியின் யூடியூப் சந்தாதாரர்கள் 2 கோடியாக உயர்ந்தது, சமகால அரசியலில் டிஜிட்டல் தகவல்தொடர்புகளின் வளர்ந்து வரும் தாக்கத்தை வெளிப்படுத்தும் வெற்றியைக் குறிக்கிறது.
யூடியூப்பைப் பயன்படுத்துவதன் மூலம், அரசியல் தகவல்தொடர்புகளைப் பிரதமர் மோடி மாற்றியமைத்துள்ளார். அதன் மூலம், அரசாங்க முன்முயற்சிகள் மற்றும் கொள்கைகள் பற்றிய தகவல்களைப் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைக்கச் செய்துள்ளார்.
யூ-டியூப்பில் 2 கோடி சப்ஸ்கிரைபர்கள் என்ற இந்த எண்ணிக்கையானது பிரதமரின் பிரபலத்தை மட்டுமல்ல, டிஜிட்டல் யுகத்தில் குடிமக்கள் தங்கள் தலைவர்களுடன் பினைக்கப்படும் மாற்றத்தையும் சுட்டிக்காட்டுகிறது.
டிஜிட்டல் ஆளுகை மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்றுக்கொள்வதில் இவர் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை இந்த சாதனை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பிரதமரின் யூடியூப் சேனலானது குடிமக்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் குறித்துத் தொடர்ந்து தெரிந்து கொள்வதற்கான நேரடி வழியாகச் செயல்படுகிறது.
காணொளிகள் மற்றும் நேரடி தொடர்புகள் மூலம், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க முடிந்தது.
நரேந்திர மோடி 20 மில்லியன் யூடியூப் சந்தாதாரர்களை அடைந்தது தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, அரசியல் தகவல்தொடர்பு வளர்ச்சிக்கு ஒரு சான்றாகும். பிரதமருக்கு அடுத்தபடியாக பிரேசில் அதிபர் 2வது இடத்திலும், உக்ரைன் அதிபர் 3வது இடத்திலும் உள்ளனர்.
உலக வல்லரசான நாடான அமெரிக்காவின் அதிபர் 4வது இடத்தில் உள்ளார். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் யூ-டியூப் சேனல் 10ஆவது இடத்தில் உள்ளது.