காஞ்சிபுரம் என்கவுண்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்தனர்.
காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், பிள்ளையார்பாளையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை அரிவாளால் தாக்கத் தொடங்கினர்.
இதனால் பிரபாகரன் அலறியடித்து ஓடத் தொடங்கினார். ஆனால் அவரை துரத்திய அந்த கும்பல் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இதனையடுத்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், கொலையில் தொடர்புடையவர்களை தேடினர்.
அவர்கள் இந்திரா நகரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு விரைந்த போலீசார், அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் போலீசாரை அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து போலீசார் அவர்களை சுட்டனர். இதில் ரவுடிகள் ரகு, அசான் சம்பவ ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சண்டையில் காயம் அடைந்த சிறப்பு காவல் உதவியாளர் ராமலிங்கம், காவலர் சசிகுமார் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.