ரஷ்யா சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்,அந்நாட்டு துணைப் பிரதமரும், தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாந்துரோவுடன் இருதரப்பு உறவு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினார்.
5 நாள் அரசுமுறை பயணமாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ரஷ்யா சென்றுள்ளார். அவர் ரஷ்ய துணைப் பிரதமரும்,தொழில் மற்றும் வர்த்தக அமைச்சருமான டெனிஸ் மாந்துரோவை நேற்று சந்தித்து பேசினார்.
அப்போது வர்த்தகம்,நிதி,எரிசக்தி,சிவில் விமான போக்குவரத்து மற்றும் அணுசக்தி களங்களில் முன்னேற்றம் உள்ளளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.இந்தியா-ரஷ்யா இடையிலான உறவு தொடா்ந்து சிறப்பான பாதையில் பயணிப்பதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா அதிகரித்த்துள்ளது. உக்ரைன் உடனான போருக்கு பேச்சுவார்ததை மூலம் தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சரின் ரஷ்ய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.