வேட்டையன் திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காகத் தூத்துக்குடி விமான நிலையத்திற்குச் சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவருடன் இப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ரித்திகா சிங், துஷாரா, மஞ்சு வாரியர், ரானா டகுபதி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
பேட்ட, தர்பார், ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அனிருத் நான்காவது முறையாக ரஜினிக்கு இசையமைக்கிறார். லைகா ப்ரோடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. சமீபத்தில் தூத்துக்குடி பகுதி பெரும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நகரமே துண்டிக்கப்பட்டது.
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் மீண்டும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கியுள்ளது.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ரஜினிகாந்த் வந்து இறங்கிய காணொலி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.