2024 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் 5 சாதனங்களை இங்குப் பார்ப்போம்.
வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், 2024 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் எதனை வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்பதை அறிய மக்கள் ஆர்வமாக உள்ளனர்.
ஆப்பிள் நிறுவனமானது வரும் ஆண்டில் ChatGPT மற்றும் Bard-க்கு போட்டியாக ஒரு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்திடமிருந்து எதிர்பார்க்கப்படும் 5 சாதனங்கள் :
1. ஆப்பிள் விஷன் ப்ரோ – கலப்பு ரியாலிட்டி ஹெட்செட் :
இது Virtual reality அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லக் கூடிய மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் (mixed-reality headset) சாதனமாகும். இந்த சாதனத்தை ஆப்பிள் நிறுவனம் ஜனவரி அல்லது பிப்ரவரியில் விற்பனைக்குக் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.
2. ஆப்பிள் GPT :
“அஜாக்ஸ்” என்று அழைக்கப்படும் ஆப்பிள் அதன் சொந்த உள் உருவாக்க முன் பயிற்சி பெற்ற மின்மாற்றி (GPT) செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியை உருவாக்கியுள்ளது. இந்த அஜாக்ஸ் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்று பல அறிக்கைகள் கூறுகிறது.
3. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 :
இந்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 9 அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம். ஆகையால் அடுத்த ஆண்டு ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10-யை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் அடுத்த ஆண்டு ஆப்பிள் வாட்சின் 10 ஆம் ஆண்டு என்பதால் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10-யை வெளியிடும் என்று நம்பப்படுகிறது.
4. புதிய ஐபாட்கள் :
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆப்பிள்-யின் iPad Air, iPad Pro மற்றும் MacBook Air ஆகியவற்றின் புதிய மாடல்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5. ஏர்போட்கள் 4 :
அடுத்த ஆண்டு பல மாற்றங்களைக் கொண்டு ஏர்போட்கள் 4-யை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய ஏர்போட்கள் இரைச்சல் சத்தம் இல்லாமல் புதிய வடிவமைப்புடன், USB-C போர்ட் ஆகியவற்றையும் கொண்டு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.