இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா அணியின் கே.எல்.ராகுல் 101 ரன்களை அடித்து அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இதில் டி20 மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் தொடர்கள் நிறைவடைந்த நிலையில் நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய அணிக்கு தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்து தடுமாறி வந்தது. அப்போது இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கே.எல்.ராகுல் களமிறங்கினார். தனது நிதானமான ஆட்டத்தால் அணிக்கு ரன்களை சேர்ந்துவந்தார்.
இவருக்கு கூட்டணியில் இருந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வர கே.எல்.ராகுல் மட்டும் நிதானமாக விளையாடி முதல் நாள் முடிவில் 70 ரன்களை சேர்ந்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று நடைபெற்ற இரண்டாம் நாள் ஆட்டத்தில் கே.எல்.ராகுலுடன் கூட்டணியிலிருந்த முகமது சிராஜ் ஆட்டமிழக்க இந்தியா 9 விக்கெட்கள் இழந்தது. இறுதியாக கே.எல்.ராகுல் சதம் அடித்து ஆட்டமிழந்தார்.
இறுதியாக இந்தியா தனது 10-வது விக்கெட்டை இழந்து 245ரன்களை எடுத்து. கே.எல்.ராகுல் 14 பௌண்டரீஸ் மற்றும் 4 சிக்சர்கள் என மொத்தமாக 137 பந்துகளில் 101 ரன்களை அடித்தார்.
இதன் மூலம் பாக்ஸிங் டே கிரிக்கெட்டில் இரண்டு முறை சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.