முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் சட்டவிரோத அமைப்பு: அமித்ஷா அறிவிப்பு!
Sep 6, 2026, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் சட்டவிரோத அமைப்பு: அமித்ஷா அறிவிப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Dec 27, 2023, 05:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் (மஸரத் ஆலம் பிரிவு) சட்ட விரோத அமைப்பு என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலும், அந்த அமைப்பு தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், பிரிவினை மற்றும் தீவிரவாத செயல்களுக்கு ஆதரவளிப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டு, மத்திய அரசால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பின் முக்கியத் தலைவராக இருந்தவர் சையது அலி ஷா கிலானி. அனைத்து இந்திய ஹுரியன் மாநாட்டு அமைப்பை தொடங்கியவர்களில் முக்கியத் தலைவர். இவரது மறைவுக்குப் பிறகு அனைத்து இந்திய ஹுரியன் மாநாட்டு அமைப்பின் இடைக்கால தலைவராக இருந்தவர் மசாரத் ஆலம்.  இவர், தற்போது முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.

இந்த நிலையில், முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் அமைப்பு தேச விரோத மற்றும் பிரிவினைவாத செயல்களில் ஈடுபடுவதாகவும், தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சியை அமைக்க வேண்டும் என்று பொதுமக்களை தூண்டுவதாகவும் கூறி, இந்த அமைப்புக்குமத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பதிவில், “மசாரத் ஆலமின் முஸ்லீம் லீக் ஜம்மு காஷ்மீர் கட்சியை (MLJK – MA) சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் (உபா) கீழ் சட்டவிரோத அமைப்பாக அறிவிக்கிறோம்.

இந்த அமைப்பும், இதன் நிர்வாகிகளும் ஜம்மு காஷ்மீரில் தேச விரோத செயல்களிலும், பிரிவினைவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், தீவிரவாத செயல்களை செய்ததுடன், ஜம்மு காஷ்மீரில் இஸ்லாமிய ஆட்சி அமைய வேண்டும் என்று மக்களை தூண்டி விட்டு வருகின்றனர்.

இந்தியாவின் ஒற்றுமைக்கும், இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் எதிரான செயல்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அவர்கள் சட்டத்தின் சீற்றத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை பிரதமர் மோடியின் அரசு, தெளிவாகவும் உரக்கவும் குறிப்பிட விரும்புகிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா, கேம்பஸ் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 9 அமைப்புகளுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

The ‘Muslim League Jammu Kashmir (Masarat Alam faction)’/MLJK-MA is declared as an 'Unlawful Association' under UAPA.

This organization and its members are involved in anti-national and secessionist activities in J&K supporting terrorist activities and inciting people to…

— Amit Shah (@AmitShah) December 27, 2023

Tags: jammu kashmirAmit shaBannedMuslim leagueUAPA
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோடு-திருநெல்வேலி விரைவு ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்க ஒப்புதல்!

Next Post

சென்னை கிரிக்கெட் அணியின் உரிமையாளரான சூர்யா!

Related News

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

பாகிஸ்தான் அத்துமீறினால் அந்நாட்டு எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் – பிரதமர் மோடி எச்சரிக்கை!

கே.என் நேரு வீட்டில் சிக்கியது என்ன ?; தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை

‘Made-in-India’- வரலாற்று சாதனை : செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் வசிக்க வீடு ரெடி – சிறப்பு தொகுப்பு!

சீன எல்லையில் Early-warning system : மீண்டும் சீரமைக்க நேபாள அரசு தீவிரம் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அவிநாசியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய முதல் நிலை ஒப்பந்ததாரர் வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை!

வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ அசன் மவுலானா, தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகள் தடை – தேர்தல் ஆணையம்

அரசியல் காரணங்களுக்காக கே.என். நேரு தொடர்புடைய இடங்களில் சோதனை – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கேரளாவில் கார் விபத்து – திண்டுக்கல் கல்லூரி மாணவர்கள் 7 பேர் பலி!

ஜவ்வாது மலையில், அரசு வன நிலத்தை பட்டா செய்து தருவதாகக் கூறி ஒரு கோடி லஞ்சம் – 6 பேர் சஸ்பெண்ட்!

ஆர்எஸ்எஸ் தலைவரின் இங்கிலாந்து பயணம் இந்தியாவின் கலாச்சார கண்ணோட்டம் குறித்த சிறந்த புரிதலை வளர்க்கும்  – சுனில் அம்பேகர்

கே.என். நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை – சகோதரர் வீட்டிலும் ரெய்டு!

போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் – ஏர் இந்தியா விமானி பணிநீக்கம்!

கும்பகோணத்தில் மதுபானம் வாங்க 2 கி.மீ. தூரம் காத்திருந்த மதுப்பிரியர்கள்!

விக்கிரவாண்டி – சேத்தியாத்தோப்பு நான்கு வழிச்சாலை பணிகள் எப்போது முடியும்? – தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதில்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies