தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு!
Aug 19, 2025, 11:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வாழ்க்கை வரலாறு!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 10:32 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் 1952ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி அழகர்சாமி நாயுடு – ஆண்டாள் அம்மாள் அவர்களுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலதில் பிறந்தார்.

இவருக்கு 1990 ஆம் ஆண்டு பிரேமலதா என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு விஜய் பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் என்ற இரு குழந்தை பிறந்தது.

விஜயகாந்த் தனது ஆரம்ப கால பள்ளிப் படிப்பை தேவகோட்டையிலுள்ள தி பிரிட்டோ உயர்நிலை பள்ளியிலும், மதுரையில் உள்ள நாடார் உயர்நிலை பள்ளியிலும் பயின்றார்.

பத்தாம் வகுப்பு வரை படித்த விஜயகாந்த் அதன்பின் தனது தந்தையின் அரிசி ஆலையின் நிர்வாகத்தை கவனிக்க ஆரம்பித்தார்.

படிக்கும் பருவத்திலேயே இவருக்கு சினிமா மீது ஈர்ப்பு இருந்ததால் சினிமாவில் சேர்ந்து நடிக்க வாய்ப்பு தேடி சென்னை வந்த
இவருக்கு 1978ல் இயக்குநர் காஜாவின் இயக்கத்தில் வெளிவந்த ‘இனிக்கும் இளமை’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து தனது திரைப்பயணத்தை துவக்கினார்.

அதன்பின் 1980ல் வெளிவந்த ‘தூரத்து இடிமுழக்கம்’ என்ற திரைப்படத்தில் முக்கிய வேடமேற்று நடித்து ஒரு நிலையான இடத்தை தமிழ் சினிமாவில் பிடிக்க முற்பட்டார். 1981ல் இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் இவர் நாயகனாக நடித்து வெளிவந்த ‛சட்டம் ஒரு இருட்டறை’ என்ற திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. விஜயகாந்தின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தையும் தந்தது.

இதன் பிறகு தன்னை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக காண்பிக்க நினைத்து அதற்கேற்ற கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து பல வெற்றிப்படங்களை தந்தார் விஜயகாந்த்.

தன்னால் குணசித்திர வேடமேற்று நடித்தும் வெற்றி பெற முடியும் என்று நிரூபித்த படம் இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த ‘வைதேகி காத்திருந்தாள்’ என்ற திரைப்படமாகும். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற இதனைத் தொடர்ந்து ‘அம்மன் கோயில் கிழக்காலே’ ‘தழுவாத கைகள்’ ‘ஊமை விழிகள்’ என்று பேர் சொல்லும்படி இவருடைய படப்பட்டியல் நீண்டது.

1991ல் இயக்குநர் ஆர்கே செல்வமணியின் இயக்கத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. இத்திரைப்படம் விஜயகாந்திற்கு 100வது திரைப்படம் என்ற அந்தஸ்தோடு வந்தது மட்டுமல்லாமல் இத்திரைப்படத்திற்கு பின்னர் தான் இவரை இவருடைய ரசிகர்களும் இவருடைய கட்சித் தொண்டர்களும் அன்போடும் மரியாதையோடும் ‘கேப்டன்’ என்று அழைக்க ஆரம்பித்தனர்.

சுமார் 35 வருடங்கள் திரைத்துறையில் ஆதிக்கம் செலுத்திய இவர் 2005ம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி மதுரையில் ‘தேசிய முற்போக்கு திராவிட கழகம்’ என்ற பெயரில் கட்சி ஒன்றை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தையும் துவக்கினார்.

2006ல் நடந்த தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அனேக இடங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்று திமுக மற்றும் அதிமுகவிற்கு அடுத்த தனிப்பெரும் கட்சியாக உருவானது. இவர் சந்தித்த முதல் தேர்தலில் தனது முதல் களமாக விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட சுமார் 13000 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி வாகை சூடி எம்எல்ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில் இவருடைய கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து 49 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வென்று, திமுகவை பின்னுக்கு தள்ளி பிரதான எதிர்கட்சியாக உருவெடுத்தது. அதற்கு பின்பு சில நாட்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டு பிரதான எதிர்கட்சி தலைவராக செயல்பட்டு வந்தார்.

Tags: actor Vijayakanth
ShareTweetSendShare
Previous Post

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார் !

Next Post

தமிழ் திரையுலகின் ஜாம்பவான் விஜயகாந்த்! – பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

Related News

சென்னை பல்லவன் இல்லத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் கைது!

இந்திய வம்சாவளி கூரியர் மேனுக்கு ஆஸ்திரேலிய பெண் பாராட்டு – ஏன் தெரியுமா?

ஜம்மு-காஷ்மீரில் உள்ளூர் மக்களுடன் கிரிக்கெட் விளையாடிய ராணுவ அதிகாரி!

மகாராஷ்டிராவில் பணியின்போது சினிமா பட பாடல் பாடிய தாசில்தார் பணியிடை நீக்கம்!

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies