சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் விஜயகாந்த் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும் எனத் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். இன்று அதிகாலை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது.
சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புமிக்க தலைவரும், சிறந்த மனிதநேயவாதியுமான திரு. விஜயகாந்த் அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும்… pic.twitter.com/WrMlAlVJdz
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) December 28, 2023
சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் வழங்கிய அளப்பரிய பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். எனது பிரார்த்தனைகள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ஆதரவாளர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி! – ஆளுநர் ரவி