விஜயகாந்த் மறைவு குறித்த தனது இரங்கல் செய்தியில் ஒரு ரத்தினத்தை இழந்து விட்டோம் என்று நடிகை குஷ்பு கூறியிருக்கிறார்.
இதுகுறித்து பிரபல நடிகையும், பா.ஜ.க. தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “ஒரு ரத்தினத்தை இழந்து விட்டோம். தங்க இதயம் கொண்ட நல்ல மனிதர். எங்கள் அன்புக்குரிய கேப்டன், இனி நீங்கள் நிம்மதியாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும், கட்சித் தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஓம் சாந்தி” என்று தெரிவித்திருக்கிறார்.