எனது அன்பு நண்பர், மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர் விஜயகாந்த் என ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவவில்,
எனது அன்பு நண்பர், மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை என்றும் அர்ப்பணித்தவர், நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு நான் மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி சேர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி!