தேச பக்தியும், தெய்வ பக்தியும் ஒருங்கே பெற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!
Aug 19, 2025, 08:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேச பக்தியும், தெய்வ பக்தியும் ஒருங்கே பெற்றவர்: ஓ.பன்னீர்செல்வம்!

Web Desk by Web Desk
Dec 28, 2023, 12:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விஜயகாந்த் தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க.வின் முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தமிழ்த் திரைவானில் கொடிகட்டி பறந்தவரும், தமிழக சட்டப்பேரவை முன்னாள் எதிர்கட்சித் தலைவரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் நிறுவனருமான அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

‘புரட்சிக் கலைஞர்’ என்றும், ‘கேப்டன்’ என்றும் தனது ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்கள், தேச பக்தியையும், தெய்வ பக்தியையும் ஒருங்கே பெற்றவர். ஜாதி, மத பேதமின்றி ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை கொண்டவர்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் பல நிகழ்ச்சிகள் மூலம் சங்கத்தின் கடனை அடைத்தவர் திரு.விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது. பல வெற்றிப் படங்கள் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர். கலைமாமணி உட்பட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

தனியாக ஒரு கட்சியைத் துவக்கி, சட்டமன்ற உறுப்பினராகவும், எதிர்கட்சித் தலைவராகவும் உயர்ந்த பெருமை இவருக்கு உண்டு. திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த் அவர்கள். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு.

இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது. இவரது இழப்பு தமிழக மக்களுக்கு பேரிழப்பாகும். விஜயகாந்த் அவர்கள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரை உடனிருந்து கண் இமை போல் காத்தவர் அவரது மனைவி அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் என்பதை இந்தத் தருணத்தில் நினைவுகூர்கிறேன்.

அன்புச் சகோதரர் விஜயகாந்த் அவர்களை இழந்து வாடும் அவரது மனைவி அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்துக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகத் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: ADMKO Pannirselvamcondolence
ShareTweetSendShare
Previous Post

செயற்கரிய பல செயல்கள் செய்தவர்: எடப்பாடி பழனிசாமி!

Next Post

விஜயகாந்த் பணிகள் என்றென்றும் நிலைத்திருக்கும்: டி.டி.வி.தினகரன்!

Related News

துாங்கும் மாநகராட்சியால் துயரம் : பராமரிப்பு இல்லாததால் பாழாய் போன நிழற்குடை!

மாரத்தானில் அசத்தல் : பதக்கங்களை குவித்து சாதிக்கும் இரட்டையர்கள்!

தொடர் வானிலை சீற்றங்களால் உருக்குலைந்த இமாச்சல் : சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறும் அதிர்ச்சி பின்னணி!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

வரலாறு காணாத மழையால் தத்தளிப்பு : மும்பையில் முடங்கிய மக்களின் இயல்பு வாழ்க்கை!

சிலை வைத்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

ஓக்லா தடுப்பணை வழியாக தண்ணீர் வெளியேற்றம்!

மீரட்டில் ராணுவ வீரரை தாக்கிய சுங்கச்சாவடி ஊழியர்கள்!

உருவாகி வரும் 40 மாடி உயர ராக்கெட் – இஸ்ரோ தலைவர்

உக்ரைன் – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு : டொனெட்ஸ்க்கில் FAB-500 ரக குண்டுகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த சீன அமைச்சர்!

புதிய க்ரூஸர் பைக் இந்தியாவில் வெளியானது!

நாட்டை இரு முறை பிரித்த நேரு – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

மதுரை கலைஞர் நூலகத்திற்கு பெயர் மாற்றக் கோரி ஆர்ப்பாட்டம்!

“ஓ காட் பியூட்டிபுல்” படத்தின் 2வது பாடலின் அறிவிப்பு!

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து : மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies