விஜயகாந்த் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “தே.மு.தி.க. நிறுவனர் விஜய்காந்த் அவர்களின் மறைவுக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவருடைய குடும்பத்தினருக்கும் அக்கட்சியின் செயல் வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். விஜய்காந்த் அவர்களுடைய ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.