சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வேட்டையன் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு தற்போது சென்னை புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகரும், தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரின் மறைவுக்கு நடிகர்களும், தலைவர்களும், ரசிகர்களும், கட்சி தொடர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் மறைவையொட்டி தமிழகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் காலை காட்சி ரத்து செய்யப்படுவதாகத் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது நடிகரும், விஜயகாந்த்தின் நண்பருமான ரஜினிகாந்த் தான் நடித்து வரும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை புறப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.