விஜயகாந்த் மறைவு தொடர்பாக இரங்கல் தெரிவித்திருக்கும் இயக்குநர் சேரன் வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன் என்று உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் சேரன் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “வார்த்தைகளை தேடுகிறேன் கேப்டன்.. இறப்பு செய்தி குறித்த எந்த வார்த்தைகளுமே உங்களுக்காக எழுத மனம் ஒவ்வவில்லை.. வாழும் காலம் முழுதும் சிறந்த மனிதனாய் வாழ்ந்து காண்பித்தவர் நீங்கள்… தீரா நோயிலிருந்து விடுதலை பெற்று போய் வாருங்கள்… வணங்குகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.