நடிகராக உதயமாகி, புரட்சிக் கலைஞராக பெயரெடுத்து, தனக்கென தனிப் பெயரை ஈட்டிய விஜயகாந்த் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தமிழக திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் இரங்கல் தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு இரங்கல் தெரிவித்து டி.ராஜேந்தர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திரையுலகில் ஒரு நடிகராக உதயமாகி, புரட்சிக் கலைஞராக பெயரெடுத்து, கேப்டன் என்று தலையெடுத்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக பதவி வகித்து, தே.மு.தி.க. தலைவராக உருவெடுத்து, தமிழக எதிர்கட்சி தலைவராக கால்பதித்து, தனகென்று ஒரு தனி பெயரை ஈட்டிய அருமை நண்பர் கேப்டன் விஜயகாந்த் இயற்கை எய்தினார் என்ற செய்தி எனது இதயத்தை ஈட்டி போல் தாக்கியது.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது ரசிகர்களுக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.