கத்தார் நீதிமன்றம் எட்டு இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகளின் மரண தண்டனையை சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.
உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கத்தார் நீதிமன்றம் குறைத்து உள்ளது. தண்டனை விபரம் இன்னும் வெளியாகவில்லை. சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.
இந்த ஆண்டு அக்டோபரில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம்சாட்டி, எட்டு முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகளுக்கு கத்தார் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
கத்தாரில் உள்ள நீதிமன்றம் எட்டு இந்தியக் கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சிறைத் தண்டனையாகக் குறைத்துள்ளது. இன்று வெளிவிவகார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், எவ்விதமான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.