தனிக்காட்டு ராஜாவாக, ராஜநடை போட்டி தனெக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே கொண்டவர் தான் கேப்டன் விஜயகாந்த்.
1984ஆம் ஆண்டு, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஆண்டு. அந்த ஒரே ஆண்டில் மட்டும் விஜயகாந்த நடித்த 18 திரைப்படங்கள் வெளியாகின. மிகச் சில நடிகர்களுக்கு மட்டுமே இந்த சாதனை உள்ளது.
கமல் ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என்ற தலைமுறை உருவான போது, அதற்கு இணையாக தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் கேப்டன் விஜயகாந்த்.
தனது பல படங்களில் நீண்ட உணர்ச்சிபூர்வமான வசனங்களை, தன்னுடைய பாணியில் ஒரே டேக்கில் பேசி முடிப்பவர் விஜயகாந்த்.
கிராமங்களில் இவரது படங்கள் வெளியாகும் தினத்தன்று திருவிழாவுக்கு செல்வது போல கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்கச் செல்வார்கள் கிராம மக்கள் என்று ரசிகர் ஒருவர் கூறியிருக்கிறார்.
இப்படி கமல், ரஜினி காலத்தில் தனிக்காட்டு ராஜாவாக, ராஜநடை போட்டவர் தான் புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த்.