தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு தமிழ் திரையுலக பிரபலங்கள், இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பிரபலங்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,
பாரிவேந்தர் எம்.பி இரங்கல் “எனது நல்ல நண்பர். சிறந்த குணங்கள் கொண்ட பெரிய மனிதர். இப்போது அவர் இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி தொண்டர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. அவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ரோஜா இரங்கல் விஜயகாந்துடன் பல படங்களில் நடித்துள்ள, ரோஜா செல்வமணி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவில், “தமிழ் திரையுலகின் ஜாம்பவான் கேப்டன் திரு விஜயகாந்த் அவர்களின் மறைவு செய்தி கேட்டு ஆழ்ந்த துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள், பொன்னான இதயம் கொண்ட மனிதருக்கும், அவரது தெய்வீக ஆத்மா சாந்தியடையட்டும் என தெரிவித்துள்ளார்.
பிரபல இளம் நடிகர் அசோக் செல்வன், ‘ உங்கள் பெயர் என்றென்றும் வாழும். குட்பை, கேப்டன் என, விஜயகாந்த் புகைப்படத்துடன் கூடிய பதிவை போட்டுள்ளார்.
இயக்குனர் மோகன் ராஜா போட்டுள்ள பதில் ‘நீங்கள் யாராலும் ஈடுசெய்ய முடியாதவர் மற்றும் எப்போதும் உங்களை மிஸ் செய்வோம் என கூறி இதயம் நொறுங்கி விட்டதாக எமோஜி போட்டு தெரிவித்துள்ளார்.
RRR பட நாயகன் ஜூனியர் NTR போட்டுள்ள பதிவில், “விஜயகாந்த் மறைவு செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலும் ஒரு உண்மையான அதிகார மையமாக விளங்கினார். அவரது ஆன்மா நித்திய சாந்தி அடையட்டும். எனது எண்ணங்கள் எப்போதும் அவருடைய குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் இருக்கும் என கூறியுள்ளார்”.
நடிகர் சத்யராஜ் மகனும், நடிகருமான சிபிராஜ்… விஜயகாந்த் மறைவு குறித்து எக்ஸ் தளத்தில் போட்டுள்ளதாவது, “ஒரு அற்புதமான நடிகர், ஒரு துணிச்சலான அரசியல்வாதி மற்றும் ஒரு உண்மையான மாஸ் ஹீரோ ரீல் மற்றும் நிஜ வாழ்க்கை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அற்புதமான ஆத்மா இப்போது இல்லை! RIP எங்கள் அன்புக்குரிய # கேப்டன் விஜயகாந்த் சார். நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் என கூறியுள்ளார்.
நடிகர் ஜெயம் ரவி போட்டுள்ள பதிவில், ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர், அற்புதமான ஆன்மா எங்கள் கேப்டன் விஜயகாந்த் சார். சினிமாவில் உங்களை யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகை ஸ்ரேயா ரெட்டி , விஜயகாந்த் மறைவுக்கு தன்னுடைய எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்து போட்டுள்ள பதிவில், ‘உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். உங்களை யாராலும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் ரவி தேஜா போட்டுள்ள பதிவில், “விஜயகாந்த் காருவின் மறைவு அறிந்து வருந்துகிறேன், அவரின் தாக்கம் நிறைந்த வாழ்க்கையின் நினைவுகளில் அவரது குடும்பத்தினர் ஆறுதல் அடையட்டும். என தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் போட்டுள்ள பதிவில், அந்த கம்பீரம், அந்த மனிதநேயம், அந்த நேர்மை, இனி எப்போது காண்போம் கேப்டன், உங்கள் நினைவுக்கும் ,உங்கள் உதவிகளுக்கும் என்றும் மறைவு இல்லை! ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி எனத் தெரிவித்துள்ளார்.
ஆர்ஜே பாலாஜி போட்டுள்ள பதிவில், ‘விஜயகாந்த் ரொம்ப நல்ல மனுஷன்’. இதைச் சொல்ல நீங்கள் திரையுலகில் இருக்க வேண்டியதில்லை. தமிழ்நாட்டின் ஏதோ ஒரு பகுதியில் சினிமா துறையின் ஒரு பகுதியாக இல்லாவிட்டாலும், இதை நாங்கள் அனைவரும் உணர்ந்திருக்கிறோம். நீங்கள் எப்போதும் அன்பானவர், நல்லவர், தைரியமான மனிதர், தலைவர், லெஜெண்ட் என்று நினைவுகூரப்படுவீர்கள்.
நடிகர் ஆர்யா போட்டுள்ள பதிவில், உண்மையான கேப்டன், உண்மையில் அனைவரையும் கவனித்துக்கொண்டவர். உங்களை மிஸ் செய்வோம் சார்.
நடிகர் கவுதம் கார்த்திக் போட்டுள்ள பதிவில், கேப்டன் விஜயகாந்த் மறைவு செய்தி கேட்டு வருத்தம் அடைந்தேன். கனிவான இதயம் மற்றும் எப்போதும் பெருந்தன்மை கொண்ட மனிதர். தமிழ் சினிமா உண்மையில் ஒரு அழகான ஆன்மாவை இழந்துள்ளது.