விஜயகாந்த் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாக விளங்கி இருப்பார். அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம் என்று நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். இத்தகவல் நாகர்கோவிலில் “வேட்டையன்” படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, படப்பிடிப்பை ரத்து செய்த ரஜினிகாந்த், இன்று காலை சென்னை திரும்பினார். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு வந்த ரஜினிகாந்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், “அன்பு நண்பர் விஜயகாந்தை இழந்தது மிகப்பெரிய துரதிருஷ்டம்.
விஜயகாந்த் அசாத்தியமான மன உறுதி கொண்டவர். மீண்டும் உடல் ஆரோக்கியம் பெற்று திரும்பி வந்துவிடுவார் என்றுதாந் நாம் அனைவரும் நினைத்தோம். ஆனால், தே.மு.தி.க. பொதுக்குழுவில் அவரை பார்க்கும்போது சற்றே நம்பிக்கை குறைந்துவிட்டது.
அவர் மட்டும் ஆரோக்கியமாக இருந்திருந்தால் தமிழக அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் விளங்கி இருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறினார்.