அரசு மரியாதை சும்மா வந்து விடாது: நடிகர் பார்த்திபன் இரங்கல்!
Oct 26, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு மரியாதை சும்மா வந்து விடாது: நடிகர் பார்த்திபன் இரங்கல்!

Web Desk by Web Desk
Dec 29, 2023, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தீவுத்திடலும், மத்திய, மாநில அரசு மரியாதையும் சும்மா வந்து விடாது என்று நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், “ஒரு எளிமையான, யதார்த்தமான, தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால், ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்…

என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரம்ப்பட்ட போது, வாசலில் இருந்த பிள்ளையார் கோவிலில் வேண்டிக் கொண்டேன். மீண்டு வருவாரேயானால் சரி, அல்லது சிறிதே காலம் அதுவும் இப்படித்தான் கஷ்டப்பட்டபடி வாழ்வாரேயானால் அவரை நிம்மதியாக உன்னிடம் அழைத்துச் செல் என்று துக்கத்தின் உச்சத்தில் வேண்டிக் கொண்டேன்.

அப்படி விஜயகாந்த் சாரை சிரமப்படும் மனிதராக எனக்கு பார்க்கப் பிடித்ததில்லை. நான் யாரென உலகம் ஒப்புக்கொள்ளுமுன்பு, என் முதல் படத்தைத் துவக்கி வைத்தவர். நடிகர் சங்கத் தலைவராக இருந்தபோது அவரோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாக முதலிடத்தைப் பெற்றவர்.

வாழ்வு விரைந்து முடிந்து விட்டாலும், கோடானுக்கோடி உள்ளங்களை ஆட்கொண்ட அருமை மனிதர். கோடீஸ்வரன் மறைவுக்கு தெரு வரை கூட கேட்டம் இருக்காது. கட்டுக்கடங்கா கூட்டத்தால் தீவுத்திடலுக்கு மாற்றலும், மத்திய, மாநில அரசு மரியாதையும் சும்மா வந்து விடாது. அவர் வாழ்ந்த வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருந்தது.

அது சினிமாவில் வந்ததோ, அரசியலில் வந்ததோ அல்ல. அவர் வளர்த்த மனிதநேய மாண்பிற்கு கிடைத்த மரியாதை. மரியாதை மிகுந்தவரின் பிரிவு தரும் துயரத்தை விட, அவரது உள்ளத்தின் உயர்வு ஒரு பாடமும் கற்றுத் தருகிறது.

வேதனைத் தீர எழுதிக் கொண்டே போகலாம்… எதுவும் ஓரிடத்தில் முடியும். அது எவ்வாறு சிறப்பாக முடிகிறது என்பதே முக்கியம். அவரைப்போல சிறந்த மனிதனாக வாழ்வதே அவருக்கான நெஞ்சார்ந்த அஞ்சலி!” என்று தெரிவித்திருக்கிறார்.

ஒரு எளிமையான, யதார்த்தமான,தைரியமான, மனிதநேயமிக்க ஒரு நண்பரின் மறைவுக்குப் பின்னால்,ஒரு ஆழ்ந்த அமைதியை நானே உருவாக்கிக்கொண்டு அமர்ந்திருந்தேன் கொஞ்ச நேரம்….
என் தந்தை கேன்ஸரால் பாதிக்கப்பட்டு தன் கடைசி நாளில் ஆழ்வார்பேட்டை தேவகி ஆஸ்பத்திரியில் மிகவும் சிரம்ப்பட்ட போது,வாசலில்… pic.twitter.com/otoJGgCShv

— Radhakrishnan Parthiban (@rparthiepan) December 28, 2023

Tags: DirectorFuneralVijayakanthParthiban
ShareTweetSendShare
Previous Post

அரசியலில் மிகப்பெரிய சக்தியாகத் திகழ்ந்திருப்பார்: ரஜினி இரங்கல்!

Next Post

75-வது குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை தொடக்கம்!

Related News

தேர்தலில் யார் Expiry ஆவார்கள் என்பது தெரியவரும்? – டிடிவி தினகரன்

தெலங்கானா : உயிரிழந்த காவலர்களை கௌரவிக்கும் வகையில் நடந்த சைக்கிள் பேரணி!

இந்திய எல்லையில் வான் பாதுகாப்பு தளம் அமைக்கும் சீனா!

போரூர்-ஐயப்பன்தாங்கல் பிரதான சாலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழை நீர்!

சென்னையில் விசிக கட்சியினரால் வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் – புதிய வீடியோ வெளியானது!

மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிஸ் திட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் முப்படைகள் கூட்டு ராணுவ பயிற்சி!

கும்பகோணம் : தேங்கி நிற்கும் மழைநீரால் மக்கள் அவதி!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது – வானிலை ஆய்வு மையம்

இடுக்கி அருகே நிலச்சரவு – ஒருவர் பலி!

வீட்டுக்கு ரூ. 8000 மின்கட்டணம் – கோவில்பட்டி மின்வாரிய அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற திமுக நிர்வாகி!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் – வானதி சீனிவாசன்

விஜய் கரூர் சென்றால் அவரது  உயிருக்கு என்ன பாதுகாப்பு உள்ளது? –  நயினார் நாகேந்திரன் கேள்வி!

வேலூர் அருகே ஏரி கால்வாயில் உடைப்பு – குடியிருப்புகளை சூழ்ந்தது வெள்ளம்!

வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை – வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

கனடா பொருள்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி – ட்ரம்ப் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies