லடாக்கில் 1,170 கோடி ரூபாய் மதிப்பில் 29 சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “லடாக்கில் மாநில நெடுஞ்சாலை, பெரிய மற்றும் பிற மாவட்ட சாலைகளை உள்ளடக்கிய 1,170 கோடி ரூபாய் மதிப்பிலான 29 சாலைத் திட்டங்களுக்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.
மேலும், 2023 – 24 நிதியாண்டில் மத்திய சாலை மற்றும் உள்கட்டமைப்பு நிதித் திட்டத்தின் கீழ் 8 பாலங்களுக்கு சுமார் 182 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த முயற்சிகள் மூலம் லடாக், தொலைதூர கிராமங்களுக்கு மேம்பட்ட இணைப்பைக் காணும்.
இது தவிர, இந்த நடவடிக்கை லடாக்கின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், குறிப்பாக விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறையில் பொருளாதார நடவடிக்கைகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்று கட்காரி கூறினார்.