அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேக விழா 22-ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில், இது தொடர்பாக 7 நாள் அட்டவணை வெளியீடப்பட்டிருக்கிறது.
அயோத்தியில் மிகவும் பிரம்மாண்டமாக இராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, ஜனவரி 16-ம் தேதி முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதையடுத்து, கும்பாபிஷேக நிகழ்வுகளின் 7 நாள் அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, ஜனவரி 16-ம் தேதி கோவில் அறக்கட்டளையால் நியமிக்கப்பட்ட புரவலர் மூலம் பரிகாரம், சரயு நதிக்கரையில் தசவித் குளியல், விஷ்ணு வழிபாடு மற்றும் கோடன் நடைபெறுகிறது.
ஜனவரி 17-ம் தேதி ராம் லல்லா சிலையுடன் அயோத்திக்கு ஊர்வலம் வரும் பக்தர்கள் மங்கள கலசத்தில் சரயு நீரைச் சுமந்து கோவிலை அடைவார்கள். ஜனவரி 18-ம் தேதி கணேஷ் அம்பிகா பூஜை, வருண பூஜை, மாத்ரிகா பூஜை, பிராமண வரன், வாஸ்து பூஜை போன்றவற்றுடன் முறையான சடங்குகள் தொடங்கும்.
ஜனவரி 19-ம் தேதி அக்னி ஸ்தாபனம், நவக்கிரக ஸ்தாபனம் மற்றும் ஹவன் நடைபெறும். ஜனவரி 20-ம் தேதி கோவிலின் கருவறையை சரயுவின் புனித நீரால் கழுவிய பின், வாஸ்து சாந்தியும், அன்னதானமும் நடைபெறும்.
ஜனவரி 21-ம் தேதி 125 கலசங்களுடன் தெய்வீக ஸ்நானம் செய்த பிறகு, ஷயதிவாஸ் செய்யப்படும். ஜனவரி 22-ம் தேதி காலை வழிபாட்டிற்குப் பிறகு, மதியம் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் ராம் லல்லாவின் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.