அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர இன்று திறந்து வைக்கிறார்.
அயோத்தி இராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி நடைபெற்றது. இதனையடுத்து அயோத்தியில் அதிநவீன விமான நிலையத்தின் முதல் கட்டம் ₹1,450 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பயணிகளுக்கு சேவை ஆற்ற முடியும்.
பிரதமர் மோடி அயோத்தி பயணம்: முழு அட்டவணை!
காலை 11.15: சுமார் 240 கோடி செலவில் புதுப்பிக்ககப்பட்டட அயோத்தி ரயில் நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
புதிய அமிர்த பாரத் ரயில்கள் மற்றும் வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து அவர் தொடங்கி வைக்கிறார். மேலும் பல ரயில்வே திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.
மதியம் 12:15: புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி விமான நிலையத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
மதியம் 1 மணி: பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் சுமார் ₹15,000 கோடிக்கும் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
அயோத்தி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான ₹11,100 கோடி மதிப்பிலான திட்டங்களும்,உத்தரப் பிரதேசம் முழுவதும் உள்ள மற்ற திட்டங்களுடன் தொடர்புடைய ₹4,600 கோடி மதிப்பிலான திட்டங்களும் இதில் அடங்கும்.
ராமர் கோவிலுக்கு செல்லும் 4 பாதைகள் அகலப்படுத்தப்பட்டு, அழகுபடுத்தப்பட்டுள்ளன.
ராம பாதை, பக்தி பாதை, தர்ம பாதை, ராமஜென்மபூமி பாதை என்ற 4 பாதைகளையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.