2023 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு மட்டும் வாட்ஸ்அப் உலகில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை திரும்பிப் பார்க்க வேண்டிய நேரம் இது. இந்த ஆண்டு மெசேஜிங் தளத்திற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, மெட்டா நிறுவனம் பயனர் அனுபவத்தை மேம்படுத்த ஒவ்வொரு மாதமும் முக்கிய புதிய அம்சங்களை கொண்டுவந்தது. அதில் தற்போது வந்துள்ள சேனல்கள் மிக முக்கியமான கூடுதல் அம்சமாக இருக்கலாம்.
லாக்ட் சாட்ஸ் ( LOCKED CHATS)
பல்வேறு புதிய அம்சங்கள் வந்த நிலையில், அதில் லாக்ட் சாட்ஸ் அம்சம் குறிப்பிடத்தக்கது. நாம் அனுப்பும் குறுந்செய்தியை யாரும் படிக்க இயலாமல் இருக்க அந்த குறிப்பிட்ட சாட்ஸை மட்டும் லாக்ட் போல்டரில் வைத்துக்கொள்ளும் அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகம் செய்தது. பயனர்கள் தங்கள் கடவுக்குறியீடு, கைரேகை அல்லது முகமூடித் திறத்தல் மூலம் அங்கீகரித்த பின்னரே பாதுகாக்கப்பட்ட சாட்களை அணுக முடியும். இந்த அம்சம் மூலம் பயனாளர்கள் தங்கள் குறுந்செய்திகளை ரகசியமாக பாதுகாக்க முடியும்.
வாய்ஸ் ஸ்டேடஸ் ( VOICE STATUS)
அடுத்தபடியாக, இந்த ஆண்டு வெளியான வாய்ஸ் ஸ்டேடஸ் அம்சம் மூலம் பயனர்கள் தங்கள் கருத்துக்களை டைப் செய்து ஸ்டேடஸில் தெரிவிப்பது போல , மனதில் தோன்றும் எண்ணங்கள், கருத்துக்களை உடனடியாக பேசி வாய்ஸ் மெசேஜ்ஜாக இந்த வாய்ஸ் ஸ்டேடஸ் அம்சத்தை பயன்படுத்தி பகிரலாம் .
காலெண்டர் சர்ச் (CALENDER SEARCH)
பழைய உரையைத் தேடுவது, குறிப்பாக அதிலிருந்து எந்த முக்கிய வார்த்தைகளையும் நினைவுபடுத்த முடியாவிட்டால், காலெண்டர் தேடலின் மூலம் எளிதாக பெறலாம். கடந்த மாதம் செய்த சாட் அல்லது கடந்த ஆண்டும் கூட அந்தச் செய்தியைக் கண்டறிய பயனர்கள் ஸ்க்ரோலிங் செய்ய தேவையில்லை இந்த அம்சம் மூலம் எளிதில் எடுத்துக்கொள்ளலாம். தற்போது இந்த அம்சம் பீட்டா சோதனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின் சாட் (PIN CHAT)
நீங்கள் அனுப்பும் அல்லது பெறவுள்ள முக்கிய குறுந்செய்திகள் கீலே போய்விடுகிறதா? அதை தேடி எடுக்க கடினமாக உள்ளதா ? அதை சரிசெய்ய கொண்டு வந்த அம்சம்தான் “பின் சாட் “. இந்த அம்சம் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் சாட் லிஸ்டில் உள்ள முக்கிய 3 நபர்களை “பின் ” செய்து கொள்ள முடியும் . இதன் மூலம் எந்த குறுந்செய்தி வந்தாலும் இந்த முக்கிய மூன்று நபர்களின் குறுந்செய்திகளே கவனிக்கும்படி மேல் இருக்கும்.
சிகிரீன் ஷாரிங் (SCREEN SHARING)
இந்த ஆண்டு வெளிவந்த அம்சங்களில் “சிகிரீன் ஷாரிங்” அம்சமும் ஒன்று . இதன் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் எளிதாக ஒத்துழைப்பதற்காக வாட்ஸ்அப்-ல் வீடியோ அழைப்புகள் மூலம் தங்கள் திரையைப் பகிர முடியும். வீடியோ அழைப்பில் இருக்கும்போது, திரைப் பகிர்வு ஐகானைத் தேர்வு செய்தால் தங்கள் நண்பர் திரையைப் பார்க்க இயலும். இந்த அம்சம் குறிப்பாக ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் பலவற்றிற்கு ஏற்றது.
தெரியாத அழைப்பாளர்களை mute செய்தல் ( SILENCE UNKNOWN CALLERS)
தெரியாத எண்கள் மூலம் வரும் அழைப்புகளை அமைதிப்படுத்த இந்த அம்சம் உதவுகிறது. இதன் மூலம் இடையூறு விளைவிக்கும் ஸ்பேம் அழைப்புகளைக் குறைக்கலாம். பயனர்களின் அழைப்புப் பதிவில் தெரியாத எண்களில் இருந்து வரும் தவறிய அழைப்புகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம், ஆனால் அவர்கள் அழைக்கும் போது உங்கள் ஃபோன் ஒலிக்காது அல்லது அதிர்வடையாது.
கம்பானியன் மோடு ( CAMPANION MODE)
பயனர்கள் தங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை பல்வேறு டிவைஸ்களில் Companion mode-டை பயன்படுத்தி இணைக்கலாம். இதன்மூலம் ஒரு ஃபோனுக்கும் iPad அல்லது இரண்டாவது ஃபோன் போன்ற ஒரு கூடுதல் சாதனத்திற்கும் இடையில் சாட்களை தொடர முடியும்.
HD இல் புகைப்படங்களை அனுப்பும் அம்சம் ( PHOTOS IN HD)
பொதுவாக வாட்சப்பில் பகிரும் புகைப்படங்கள் குவாலிட்டி குறைவாக இருக்கும். இதனை சரிக்கட்ட பயனர்களுக்கு வாட்ஸ்அப் இந்த புதிய அம்சத்தை கொண்டுவந்தது. அனுப்பும் புகைப்படங்களை உயர் தரத்துடன் அனுப்ப இந்த HD அம்சம் உதவும். ஆனால் அதற்கேற்ப டேட்டாவும் அதிகமாக இந்த அம்சம் எடுத்துக்கொள்ளும்.
வாட்சப் சேனல்ஸ் ( WHATSAPP CHANNEL)
இந்த ஆண்டு வாட்ஸ்அப்பில் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்று வாட்சப் சேனல். இது ஒரு சமூக ஊடக பயன்பாடாக மாற்றப்பட்டது. பல்வேறு தலைப்புகளில் பொது ஒளிபரப்பு சேனல்கள் மூலம் புதிய உள்ளடக்கத்தைக் கண்டறிய சேனல்கள் பயனர்களை அனுமதிக்கின்றன. கிடைக்கக்கூடிய சேனல்களை உலாவ, பயனர்கள் தங்களுக்கு பிடித்த பிரபலங்களை , விரும்புபவர்களைப் பின்தொடர, இந்த அம்சம் உதவுகிறது .