கோவை மாவட்டம் வால்பாறை அருகே தாயைப் பிரிந்து வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு மீண்டும் தாயுடன் சேர்த்து வைத்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறையை அருகே உள்ள பன்னிமேடு எஸ்டேட் சாலையில் கடந்த வெள்ளிக்கிழமை குட்டி யானை ஒன்று தன்னந்தனியாக உலா வந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், குட்டி யானையை லாரியில் ஏற்றி சென்று அருகில் உள்ள ஆற்றில் குளிக்க வைத்தனா்.
இதற்கிடையே, அந்தக் குட்டி யானையின் தாய் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். அது தனியார் தோட்டத்தில், 3 கிலோமீட்டர் தொலைவில் இருப்தை டிரோன் கண்டறிந்தனர்.
உடனடியாக குட்டி யானையை லாரியில் ஏற்றி கொண்டு தாய் யானை இருக்கும் இடத்திற்கு சென்றனர்.
குட்டி யானையின் மீது மனிதர்களின் வாடை வராமல் இருக்க சேறு பூசப்பட்டது. தொடர்ந்து குட்டி யானை தாய் யானை இருக்கும் இடத்தை நோக்கி அனுப்பினர். 5 மணி நேரப் போராட்டத்திற்கு பின் குட்டி யானை தாய் யானையிடம் சேர்ந்தது. தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.