2024 ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி, டிச.31 -ம் தேதி முதல் 2024-ம் ஆண்டு 1 -ம் தேதி வரை பொதுமக்கள் சென்னை மெரினாவில் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல, பொதுஇடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், ஒலி பெருக்கிகள் பயன்படுத்தவும் காவல்துறை மற்றும் இதர துறைகளில் கட்டாயம் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும்.
மேலும், மெரினா, எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் டிச.31-ம் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மெரினா உட்புற சாலையில் உள்ள அனைத்து வழிகளும் இரவு 7 மணி முதல் தடுப்பு கொண்டு அடைக்கப்படும்.
மேலும், கடற்கரை உட்புற சாலையில் வாகனங்கள் உள்ளே நுழைய தடை செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் குதிரைப்படை மற்றும் மணலில் செல்லக்கூடிய வாகனம் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.