2023- ஆம் ஆண்டில் கவனம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் குறித்து இதில் காண்போம்!
புதிய நாடாளுமன்றம் கட்டடம்! மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்பிக்களின் எண்ணிக்கை மற்றும் அலுவலக நடவடிக்கை விஸ்தரிப்புக்காக 971 கோடி ரூபாய் செலவில் புதியதொரு நாடாளுமன்ற கட்டடம் மே 28 அன்று இயங்கத் தொடங்கியது.
உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு! இந்தியாவில் தற்போதுவரை பேசுப்பொருளாக உள்ள விஷயம் என்றால் அது 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை கடந்த 2016ம் ஆண்டு முதல் செல்லாத என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டதுதான். அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 56 வழக்குகள் தொடுக்கப்பட்டது. இதனையடுத்து 2023ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் பணமதிப்பிழக்கத்திற்கு எதிராக தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்தது.
இந்தியாவில் நடந்த ஜி 20 மாநாடு! செப்டம்பர் மாதத்தில் உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஜி 20 மாநாடு பிரதமர் மோடி தலைமையில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஆப்பிரிக்க ஒன்றியம் இந்த கூட்டமைப்பில் புதிய உறுப்பு நாடாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
17 மாநிலங்களில் பாஜக தலைமை டிசம்பர் 3 அன்று அறிவிக்கப்பட்ட சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றது. தெலுங்கானாவில் மட்டும் ஆறுதல் பரிசாக இந்திய தேசிய காங்கிரஸ் வெற்றி பெற்றது. மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் ஜோரம் மக்கள் இயக்கம் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பாஜக கூட்டணி தலைமை ஏற்கிறது.
மஹுவா மொய்த்ரா! திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம் பி க்களில் ஒருவரான மஹுவா மொய்த்ரா பல கேள்விகளால் மத்திய அரசை துளைத்து எடுத்தவர். இவரது பெரும்பாலான கேள்விகள் அதானி குடும்பம் தொடர்பாக இருந்தன. இந்தக் கேள்விகளை எழுப்ப ரியல் எஸ்டேட் தொழிலதிபர் தர்ஷன் ஹீரானந்தானியிடம் இவர் பெரும் தொகையை லஞ்சமாக பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக மக்கள் நீதிமுறை குழு விசாரணை ஒன்று நடத்தப் ‘பட்டது. அதன் பரிந்துரையின் அடிப்படையில் அவரது எம்பி பதவி பறிமுதல் செய்யப்பட்டது.
370வது சட்டப்பிரிவு செல்லும்! 2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீர் தொடர்பாக மத்திய அரசு முன்னெடுத்த அத்தனை நடவடிக்கைகளும் செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்சநீதிமன்றம். ‘இந்தியாவுடன் இணைந்த பிறகு, ஜம்மு-காஷ்மீருக்கு தனி இறையாண்மை உரிமை இல்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது சட்டப்பிரிவை நீக்கியது செல்லும்’ என்று ஐந்து நீதிபதிகள் அமர்வைக்கொண்ட இந்த வழக்கில் ஒருமித்த தீர்ப்பை சமீபத்தில் வழங்கியிருக்கிறார்கள் நீதிபதிகள்.
141 எம்பிக்கஸ் சஸ்பெண்ட்! டிசம்பர் 13 அன்று நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறல் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியது. மஞ்சள் நிற புகை குண்டுகளை வீசி அவையிலிருந்த உறுப்பினர்களை பதற வைத்த நபர்கள் கைது செய்யப்பட்டனர். புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு குறைப்பாடுகள் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட, இதுவரை இல்லாத அளவில் 141 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது வரலாற்றில் இடம்பெற்றது.
உல்ஃபாவுடன் அமைதி ஒப்பந்தம்! உல்ஃபா அமைப்பு, மத்திய, மாநில அரசுடன் முத்தரப்பு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்துதல், பழங்குடியின சமூகங்களுக்கான நில உரிமைகளை வழங்குதல், அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.