இந்திய ஈட்டி எறிதல் வீர்ரகளில் இந்த ஆண்டு அதிக தூரம் வரை ஈட்டியை எறிந்த ஐந்து வீர்ரகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
இந்தியாவையும், விளையாட்டையும் பிரித்து வைப்பது கடினம். இந்தியாவில் விளையாட்டின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது.
திறமையான வீர்ரகளின் செயல்களை வெளியே கொண்டு வந்து நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதே பாரதத்தின் கடமையாக உள்ளது. அந்த வகையில் ஈட்டி எறிதல் வீரர்களில் நீண்ட தூரத்திற்கு ஈட்டியை எறிந்த 5 இந்திய வீரர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்.
சிவபால் சிங் :
இதில் ஐந்தாவது இடத்தில் சிவபால் சிங் இருகிறார். இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய விளையாட்டு போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் சிவபால் சிங் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் இந்த ஆண்டு நடைபெற்ற தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 81.96 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து வெண்கலம் வென்றார்.
ரோகித் யாதவ் :
இதில் எங்காவது இடத்தில் இருப்பவர் ரோகித் யாதவ். இந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற தேசிய ஃபெடரேஷன் கோப்பையில் இவர் தனது தனிப்பட்ட சிறந்த திறமையை வெளிப்படுத்தி விளையாடினார். இந்த தொடரின் இறுதி போட்டியில் ரோகித் தனது முதல் முயற்சியில் 83.10 மீ தூரம் வரை எறிந்தார். தனது இரண்டாவது முயற்சியில் 83.40 மீ தூரம் வரை எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.
டிபி மனு :
இதில் மூன்றாவது இடத்தில இருப்பவர் டிபி மனு. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் 84.33 மீ தூரம் வரை ஈட்டியை எறிந்தார். மேலும் அந்த தொடரில் நான்கு போட்டிகளில் 80+ புள்ளிகளையே பெற்று வந்தார் மனு. ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 81.01 மீ எறிந்து வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றார்.
கிஷோர் ஜெனா :
ஐந்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் கிஷோர் ஜெனா இந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசியா விளையாட்டு போட்டிகளில் பங்கேற்ற கிஷோர் ஜெனா இறுதிப்போட்டியில் 87.54 மீட்டர் தூரம் வரை ஈட்டியை எறிந்து வெள்ளி பதக்கத்தை எறிந்தார். இதுமட்டுமின்றி 2024 ஆம் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளார்.
நீரஜ் சோப்ரா :
இதில் முதலிடத்தில் இருப்பவர் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா. ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இவர் 88.77 தூரத்துக்கு ஈட்டியை எறிந்து 2024 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
இந்தியா மட்டுமின்றி உலக ஈட்டி எறிதல் வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறார் நீரஜ். இவர் அதிகபட்சமாக 89.94 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து சாதனை படைத்துள்ளார்.