நாகை மாவட்டம் தொழில் வளர்ச்சி பெற எந்த முயற்சியும் திமுக எடுக்கவில்லை! - அண்ணாமலை
Jul 25, 2025, 07:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாகை மாவட்டம் தொழில் வளர்ச்சி பெற எந்த முயற்சியும் திமுக எடுக்கவில்லை! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 31, 2023, 11:30 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தொகுதிக்காக எதுவும் சட்டசபையில் பேசாமல், டி.ஆர்.பாலு கப்பல் நிறுவனம் சம்பாதிக்க, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஊழலுக்கு எதிரான அண்ணாமலையின் ”என் மண் என் மக்கள்” பாதயாத்திரை கீழ்வேளூர் தொகுதியில் நடைப்பெற்றது. இந்த பாதயாத்திரையில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது. விவசாயிகளாலும் மீனவர்களாலும் நிறைந்த பகுதி.

தமிழக வரலாற்றின் கரும்புள்ளியான கீழ்வெண்மணி சம்பவம் நடந்தது இந்த சட்டமன்றத் தொகுதியில் தான். 1968 இல் திமுக ஆட்சியில், கூலி உயர்வு கேட்ட ஒரே குற்றத்திற்காக பட்டியல் சமுதாயத்தை சேர்ந்த 42 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிராக பெரியார் கண்டனம் ஏதும் தெரிவிக்கவில்லை. மாறாக, 1969ஆம் ஆண்டு செம்பனார் கோவிலில் நடந்த பொதுக்கூட்டத்தில், “தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற வருமானத்தில் எப்படி வாழவேண்டும் என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

ஆனால் பாஜக, ஏழைகள் வாழ்க்கை முன்னேற வேண்டும் என்று விரும்புகிறது. ஊழல் கட்சிகள் மத்தியில், கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லாத நல்லாட்சி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழகத்திற்கு நமது பாரத பிரதமர் வழங்கிய 11 மருத்துவ கல்லூரிகளில் ஒன்று நாகப்பட்டினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு நமது மத்திய அரசு 2300 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது.

35,647 பேருக்கு பிரதமரின் வீடு திட்டம் மூலமாக வீடு, 24,748 வீடுகளில் குழாயில் குடிநீர், 91,043 வீடுகளில் இலவச கழிப்பறைகள், 42,372 பேருக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, 64,223 பேருக்கு 5 லட்ச ரூபாய் பிரதமரின் மருத்துவ காப்பீடு, 53,252 விவசாயிகளுக்கு வருடம் ரூ.6000 என இதுவரை 30,000 ரூபாய், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 3,879 கோடி ரூபாய் முத்ரா கடன் உதவி, விவசாயிகளுக்கு பிரதமர் மோடி செய்தது.

பிரதம மந்திரி மத்சய சம்பதா திட்டம் மீனவர் நலனுக்காக முதல் முறையாக மத்திய அரசில் புதிய துறையை 2019 ஆம் ஆண்டு உருவாக்கி, தமிழகத்துக்கு 2021 முதல் 2023 வரை ரூ 617 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மீனவ உள்கட்டமைப்பு நிதி மற்றும் மத்சய சம்பதா திட்டம் இணைத்து இதுவரை 1356 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1,84,457 மீனவர்கள் பயன் அடைந்துள்ளனர். தமிழகத்தில் மீன்பிடி துறைமுகங்கள் உருவாக்கிட 1464 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1,42,458 மீனவர்கள், மீன் விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இது மீனவர்கள் நலனுக்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி செய்தது.

கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, தொகுதிக்காக எதுவும் சட்டசபையில் பேசாமல், டி.ஆர்.பாலு கப்பல் நிறுவனம் சம்பாதிக்க, சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்கிறார்.

நாகை மாவட்டம் தொழில் வளர்ச்சி பெற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தனி நபர் வருமானத்தில் மற்ற மாவட்டங்களை விட நாகப்பட்டினம் மாவட்டத்தை கடைசி இடத்தில் வைத்திருக்கின்றனர்.

தமிழகத்தின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாக கீழ்வேளுர் தொகுதி இருக்கிறது. 70 ஆண்டு கால தமிழக அரசியலில், நாகப்பட்டினம் மாவட்டம், தமிழகத்தில் மனித வளர்ச்சி குறியீட்டில் கடைசி ஏழு இடங்களில் இருக்கிறது. திமுகவினாலும் கம்யூனிசத்தாலும் அழிந்த மாவட்டம் நாகப்பட்டினம் மட்டுமே.

பாரதப் பிரதமர் மோடி நல்லாட்சியில், பாரதம் உலக அரங்கில் உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில், உலகில் ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்தியாவின் மதிப்பு உலகில் உயர்ந்திருக்கிறது. வரும் பாராளுமன்றத் தேர்தலில், மூன்றாவது முறையாக மோடி அவர்கள் ஆட்சி தொடர வேண்டும்.

தமிழகத்தின் அரசியல் மாற்றத்திற்கு முதற்படியாக, வரும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் அமைய வேண்டும். தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணி வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

Tags: bjpbjp k annamalaiannamalai en mann en makkal rally
ShareTweetSendShare
Previous Post

குழந்தை ராமர் சிலை தேர்வு செய்யப்பட்டது எப்படி? முழு விவரம்!

Next Post

வங்கிகளில் இணைய பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்: நிர்மலா சீதாராமன்!

Related News

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார் பிரதமர் மோடி!

கிட்னி திருட்டு இல்லை – முறைகேடு, மா சுப்ரமணியன் : இப்படி சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? – அண்ணாமலை கேள்வி!

தொழிலாளர்கள் தங்கும் விடுதி : திறந்து 3 மாதங்களாகியும் செயல்படாத அவலம்!

மத்திய அரசின் நிதி எங்கு தான் செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

கோவை குண்டுவெடிப்பில் கைதான டெய்லர் ராஜா மீது மேலும் 2 வழக்குகள்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு : நாடு போலீஸ் ராஜ்ஜியத்திற்கு செல்கிறதோ?- சென்னை உயர்நீதிமன்றம் காட்டம்!

கங்கை கொண்ட சோழபுரம் பிரதமர் மோடி வருகை : ஹெலிகாப்டரை தரையிறக்கி பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை!

டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு : செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

நவீன ட்ரோன்களை உருவாக்க வேண்டியது அவசியம் : முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுஹான்

திருப்பூர் : கர்ப்பிணி பெண்ணுக்கு காலாவதியான ஓ.ஆர்.எஸ் பவுடர் வழங்கியதால் அதிர்ச்சி!

போக்சோ சட்டத்தில் வயது வரம்பை குறைக்க முடியாது – மத்திய அரசு

குடியரசு துணைத் தலைவர் தேர்தல் – அதிகாரி நியமனம்!

நார்டன் மோட்டார் சைக்கிளை பார்வையிட்ட இரு நாட்டு பிரதமர்கள்!

ப்ரீ புக்கிங்கில் வசூலை குவிக்கும் கூலி திரைப்படம்!

நீலகிரி : லாரி மோதி கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies