2023-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் சாதனைகள்!
Mar 15, 2026, 01:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2023-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் சாதனைகள்!

Murugesan M by Murugesan M
Jan 1, 2024, 10:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-ஆம் ஆண்டில் மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறையில் மேற்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க முன்முயற்சிகளும், சாதனைகள் குறித்து இதில் காண்போம்.

மாறிவரும் நிதி மேலாண்மைச் சூழலில், செலவினத் துறை (டி.ஓ.இ), மத்திய அரசின் பொது நிதி மேலாண்மை அமைப்பு மற்றும் மாநில நிதி தொடர்பான விஷயங்களை மேற்பார்வையிடுகிறது.

  • 15-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தி, 2023-24-ம் நிதியாண்டில் மாநில அரசுகளுக்கு மொத்தம் ரூ.1,79,140 கோடி மானியம் வழங்க செலவினத் துறை  ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மானியங்கள் அதிகாரப் பகிர்வுக்குப் பிந்தைய வருவாய் பற்றாக்குறை, சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, உள்ளாட்சி அமைப்புகள் போன்ற பல்வேறு முக்கியமான துறைகளை உள்ளடக்கியது, இது பிராந்திய வளர்ச்சிக்கு ஒரு விரிவான அணுகுமுறையை நிரூபிக்கிறது.
  • டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியின் முக்கிய அம்சமான நேரடிப் பயன் பரிமாற்றத்தை (டி.பி.டி) செயல்படுத்துவதில் பொது நிதி மேலாண்மை அமைப்பு (பி.எஃப்.எம்.எஸ்) ஒரு மைல்கல்லாக இருந்து வருகிறது.
  • பல்வேறு திட்டங்களின் கீழ் 104.02 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் பதிவு செய்துள்ள நிலையில், நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் அணுகலுக்கு முக்கியத்துவம் அளித்து, பி.எஃப்.எம்.எஸ் திறமையான நிதிப் பரிமாற்றத்தை எளிதாக்கியுள்ளது. இது,  மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா முன்முயற்சிக்கு நேரடி மற்றும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது, அமைச்சகங்கள் / துறைகளுக்கான பயனாளிகளுக்கு நேரடிப் பயன் பரிமாற்றத்தை செயல்படுத்துகிறது. மாநிலத் திட்டங்கள் உட்பட, 1,016 திட்டங்களில், பி.எப்.எம்.எஸ்., மூலம் பணம் செலுத்தப்படுகிறது.
  • மேலும், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள கருவூல அமைப்புகளை ஒற்றை நோடல் கணக்கு (எஸ்.என்.ஏ) கட்டமைப்பின் மூலம் ஒருங்கிணைத்து, நிதி வரத்து மற்றும் செலவின கண்காணிப்பை நெறிப்படுத்தியுள்ளது. மின்னணு கிராம ஸ்வராஜ்  இடையீடு,  எஸ்.என்.ஏ-ஸ்பர்ஷ்,  மத்திய ஒருங்கிணைப்பு கணக்கு அமலாக்கம் போன்ற முன்முயற்சிகள் மின் ஆளுமை மற்றும் டிஜிட்டல் மாற்றத்திற்கான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றன.
  • மூலதன செலவினங்களுக்கு மாநிலங்களுக்கான சிறப்பு உதவி, அதன் பன்முக அணுகுமுறையுடன், மாநில பொருளாதாரங்களை மேம்படுத்துவதற்கான ஓர்  உத்தி  சார்ந்த நடவடிக்கையாக தனித்து நிற்கிறது. இதில், பழைய வாகனங்களை அகற்றுவதற்கான ஊக்கத்தொகை, நகர்ப்புற திட்டமிடல் சீர்திருத்தங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நிதி சீர்திருத்தங்கள் மற்றும் வீட்டுவசதி முன்முயற்சிகள் ஆகியவை அடங்கும். ஓய்வூதியத் துறையில், மத்திய ஓய்வூதிய கணக்கு அலுவலகத்தின் (சி.பி.ஏ.ஓ) புதுமையான முன்முயற்சிகள், டிர்காயு (DIRGHAYU) செல்பேசி செயலி  மற்றும் மெய்நிகர் ஓய்வூதிய அதாலத் ஆகியவை ஓய்வூதியதாரர்களின் தேவைகளை திறம்பட நிவர்த்தி செய்வதற்கான உறுதிப்பாட்டை நிரூபிக்கின்றன.
  • இறுதியாக, 2023-24 மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மூலம் தீர்வு திட்டம், எம்.எஸ்.எம்.இ.க்களுக்கு நிவாரணம் அளித்துள்ளது மற்றும் நிலுவையில் உள்ள ஒப்பந்த தகராறுகளைத் தீர்க்க முயன்றது, இது பொருளாதார நிலைத்தன்மையை மேலும் ஊக்குவித்தது. இந்த சாதனைகள் கூட்டாக 2023-ஆம் ஆண்டில் நிதி விவேகம், வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான செலவினத் துறையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
  • 2023-24 நிதியாண்டில் மாநிலங்களுக்கான சாதாரண நிகர கடன் உச்சவரம்பு பதினைந்தாவது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.எஸ்.டி.பி) 3 சதவீதமாக, அதாவது ரூ.8,59,988 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • 2023-24ஆம் நிதியாண்டில் திறந்த சந்தைக் கடனுக்காக ரூ.6,99,016 கோடியும், பேச்சுவார்த்தை மூலம் கடன் பெறுவதற்காக ரூ.69,370.81 கோடியும் திரட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.மேலும், 2023-24 நிதியாண்டில், தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் (என்.பி.எஸ்) வழிகாட்டுதல்படி, உண்மையான என்.எஸ்.டி.எல் / அறங்காவலர் வங்கியில் அதன் ஊழியர்களின் பங்களிப்பின் முதலாளி மற்றும் ஊழியர் பங்கிற்கு சமமான கூடுதல் கடன் உச்சவரம்பை மாநிலங்கள் அனுமதித்தன.
  • 2023-24 ஆம் ஆண்டில் (27.10.2023 நிலவரப்படி) 22 மாநிலங்களுக்கு ரூ.60,876.80 கோடி கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்படுகிறது.

Tags: central governmentfinance
ShareTweetSendShare
Previous Post

2023-ம் ஆண்டு கவனம் ஈர்த்த முதல் 10 அரசியல்வாதிகள்!

Next Post

2023 : இந்திய விளையாட்டு துறையின் சாதனைகள்!

Related News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

Load More

அண்மைச் செய்திகள்

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies