ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேலுநாச்சியார் போரிட்டதை நினைவு கூர்ந்த பாரதப் பிரதமர் மோடிக்கு, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தமது எக்ஸ் பதிவில்,
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மன் கி பாத் நிகழ்ச்சியில் வேலுநாச்சியார் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டதையும், தமிழர்கள் அவரை வீரமங்கை என்று பெருமைப்படுத்தியதையும் குறிப்பிட்டு பேசியதை கேட்டு ஒரு தமிழ் பெண்ணாக கர்வம் கொள்கிறேன். தமிழர்களின் பெருமையை சமயம்… pic.twitter.com/o3oszpRq1N
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 31, 2023
பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மன் கி பாத் நிகழ்ச்சியில் வேலுநாச்சியார் அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டதையும், தமிழர்கள் அவரை வீரமங்கை என்று பெருமைப்படுத்தியதையும் குறிப்பிட்டு பேசியதை கேட்டு ஒரு தமிழ் பெண்ணாக கர்வம் கொள்கிறேன். தமிழர்களின் பெருமையை சமயம் கிடைக்கும் போதெல்லாம் உலக மக்களுக்கு எடுத்துக் கூறும் பாரத பிரதமருக்கு என் உளமாற நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.