இன்று நள்ளிரவு 2024 – ம் ஆண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், பொது மக்களுக்கு புதுச்சேரி காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இன்று நள்ளிரவு 2024-ம் ஆண்டு பிறக்க உள்ள நிலையில், புதுச்சேரியில் இன்று இரவு கடற்கரைச் சாலையில் அதிகளவில் மக்கள் கூடுவது வழக்கம்.
இதனால், இன்று மதியம் 2 மணி முதல், நாளை வரை, அதாவது 2024-ம் ஆண்டு ஜனவரி 1 -ம் தேதி காலை 9 மணி வரை, கடற்கரையில் வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு நோக்கி கடற்கரைக்குச் செல்லும் அனைத்துச் சாலைகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அவசர மருத்து சேவைகளுக்காக மட்டும் செல்ல செயிண்ட் ஆஞ்சே வீதி, செஞ்சி சாலை, சூர்கூப் வீதி ஆகியவற்றில் வாகனம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காவல்துறை தெரிவித்துள்ளது.