உலகெங்கும் பொங்கலுக்கு கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் ஆந்திரா, தெலுங்கானாவில் வெளியாகும் தேதி மாற்றப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘சாணிக்காயிதம்’, ‘ராக்கி’ ஆகிய படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. வரலாற்றுப் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றது.
சமீபத்தில் இந்த படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ என்ற தனுஷ் பாடிய பாடல் வெளியானது. அதைத் தொடர்ந்து “உன் ஒளியிலே” என்ற பாடல் வெளியானது.
இந்நிலையில் இப்படம் 2024 ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலகமெங்கும் வெளியாகிறது. இந்நிலையில் கேப்டன் மில்லர் படம் தெலுங்கு பதிப்பில் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெளியாகவில்லை என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.
ஏனெனில், ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் குண்டூர் காரம், ஈகிள், சைந்தவ், ஹனுமன், நா சாமி ரங்கா போன்ற தெலுங்கு படங்கள் வெளியாகுவதால் மற்ற மொழி படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது என்பதால் கேப்டன் மில்லர் படத்தின் தெலுங்கு பதிப்பு ஒரு சில வாரங்கள் கழித்து வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.