ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! - அண்ணாமலை
Oct 25, 2025, 07:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Dec 31, 2023, 05:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

நாளைய தினம், 2024 ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டைக் கொண்டாடும் சகோதர சகோதரிகள் அனைவருக்கும், தமிழக பாஜக சார்பாக, இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை மற்றும் தென் மாவட்டங்களில், கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புகளிலிருந்து, கொஞ்சம் கொஞ்சமாக மீண்டெழுந்து வருகிறோம். தமிழகம் முழுவதிலிருந்துமே, பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைக்க, ஜாதி, மதப் பாகுபாடுகள் இல்லாமல் ஆதரவுக் கரங்கள் நீண்டன.

நம் மக்களின் இந்த இயல்பான சமத்துவமும், சகோதரத்துவமும் எப்போதும் நிலைத்திருக்க வேண்டும். பல ஆயிரம் கோடிகள் நம் வரிப்பணத்தைச் செலவு செய்தும், எந்தத் தவறுமே செய்யாமல் ஒவ்வொரு முறையும் மழை வெள்ளத்தால் நாம் பாதிக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருப்பது ஏன் என்ற கேள்வி, முதன்முறையாக மக்கள் மத்தியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆட்சியாளர்களின் தவறுகளைத் தட்டிக் கேட்கும் துணிச்சல் தொடர வேண்டும்.
பல ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை வெளிப்படையாக ஊழல் மூலம் கொள்ளையடித்தாலும், சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்து வந்தவர்கள், நீண்ட காலம் தப்பிக்க முடியாது என்ற நம்பிக்கையை, நமது நீதித்துறை இந்த ஆண்டு உறுதிப்படுத்தியிருக்கிறது.

மக்கள் பணத்தைக் கையாடல் செய்தவர்கள் அனைவருக்குமே நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இனியொரு முறை ஊழல் செய்யும் முன்பு, இதற்கான தண்டனை நிச்சயம் என்ற எண்ணம், ஊழல்வாதிகள் மத்தியில் உருவாகியிருப்பது மகிழ்ச்சி. மக்கள் வரிப்பணம் இனி மக்களுக்கே பயன்பட வேண்டும்.

மத்தியில் நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த மாண்புமிகு பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சி, பாரத மக்களின் பேராதரவுடன், மூன்றாவது முறையாக வரும் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி.

கடந்த பத்து ஆண்டுகளாக, விவசாயிகள், மீனவர்கள், மகளிர், இளைஞர்கள், மாணவர்கள் என கோடிக்கணக்கான பொதுமக்கள் பலனடைந்துள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் வரும் ஆண்டுகளிலும் தொடரும்.

வரும் 2024 புத்தாண்டு, தமிழகத்திலும், நேர்மையான, பொதுமக்களுக்கான மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் அரசியல் மாற்றத்திற்கான நல்லாண்டாக உருவாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அனைவருக்கும், ஆரோக்கியமான, மகிழ்ச்சி பொங்கும் நலம் நிறைந்த புத்தாண்டாக அமைய வாழ்த்துக்கள்.

Tags: bjp k annamalaihappy new year 2024
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் காலண்டர் 2024 வெளியீடு!

Next Post

போலீஸார் மீது துப்பாக்கிச் சூடு: மணிப்பூரில் மீண்டும் வெடித்தது கலவரம்!

Related News

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies