பாரதிய ஜனதா கட்சி காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட உத்தரமேரூர் மேற்கு மண்டல தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.
பாரதிய ஜனதா கட்சி காஞ்சிபுரம் தொகுதி பொறுப்பாளர்- பிரபு தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, மாவட்ட துணைத் தலைவர் சோழனூர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட செயலாளர் செல்வம் பேசியதாவது,
வரும் தேர்தலில் மோடி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பது உறுதி ஆகிவிட்டது. தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக ஜெயிக்க வேண்டும். இதற்கான வாக்காளர்களை சந்திக்கும் ஆயத்தப் பணிகளை செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்.
இதை சாதகமாக நாம் பயன்படுத்தி மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும். மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மக்களின் மனதை அறிவதற்காக “நமோ செயலி மூலம்” பாஜக கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
இதன் மூலம் மக்களின் குறைகளை களைய மத்திய அரசும் தயாராகி வருகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல், மக்களவைத் தேர்தலுக்கான அரையிறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது. இதில், முக்கிய மூன்று மாநிலங்களாக மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில் பாஜக வென்றுள்ளது.
இதனால், இதே வேகத்தில் மக்களவைத் தேர்தலையும் சந்தித்தால், வெற்றிபெறுவது எளிது இதில், பொதுமக்களின் மனதை அறிய ஏற்கெனவே உள்ள நமோ செயலியை பாஜக-பயன்படுத்த உள்ளது. இதன்மூலம், (மக்கள் மனதின் கணக்கெடுப்பு)- எனும் கணக்கெடுப்பு நடத்த உள்ளது.
பொதுமக்களிடம் இதுபோல் கருத்து கேட்க தனியார் நிறுவனங்களையே அரசியல் கட்சிகள் நாடி வருகின்றன. இந்த வழக்கத்தை மாற்றி பாஜக இம்முறை நேரடியாக பொதுமக்களிடம் கருத்து கேட்கிறது.
இந்த செயலியை மேலும் பல லட்சம் மக்கள் தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்ய பல்வேறு திட்டங்களை அமலாக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கூட்டத்தின் போது பாஜக ஊடகப்பிரிவு தலைவர்கள் ஜி.ஆனந்தன், சேகரன்,
ஒன்றிய துணைத் தலைவர் மனோகரன், உள்ளிட்ட மேற்கு மண்டல-பாஜக- நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.