உத்தர பிரதேசம் மாநிலம், லக்னோவில் காபி இயந்திரத்தில் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்ற சுமார் ரூ. 2 கோடி மதிப்பிலான, 3.497 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, பயணி ஒருவர் மீது சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து விசாரணை நடத்திய சுங்கத்துறை அதிகாரிகள், அவரிடம் இருந்த காபி இயந்திரத்தை உடைத்து பார்த்தனர். அதில், உருளை வடிவிலான இரண்டு தங்கக் கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது.
இதை அடுத்து 3.497 கிலோ எடை கொண்ட உருளை வடிவிலான இரண்டு தங்கக் கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி ஆகும்.