தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கேப் டவுனில் களமிறங்கியுள்ளனர். இதுகுறித்து வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருக்கிறது.
டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெறு வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் ஜனவரி 3 ஆம் தேதி இரண்டாம் போட்டி நடைப்பெறவுள்ளது.
📍Cape Town#TeamIndia have arrived for the second #SAvIND Test 👌🏻👌🏻 pic.twitter.com/VGCTdk7yzO
— BCCI (@BCCI) January 1, 2024
இப்போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கேப் டவுனில் களமிறங்கியுள்ளனர். புத்தாண்டான இன்று இந்திய அணி வீரர்கள் கேப் டவுனுக்கு விமானம் மூலம் பயணம் மேற்கொண்டு தரையிறங்கியுள்ளனர்.
ஏற்கனவே புத்தாண்டை கொண்டாடுவதற்காக ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகா, மகள் சமைரா ஆகியோர் தென்னாப்பிரிக்காவுக்கு பயணம் செய்தனர். அதேபோல் லண்டனில் இருந்த விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவும் 2 நாட்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவுக்கு சென்றார்.
இதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அந்த வகையில் புத்தாண்டை கொண்டாடவும் இந்திய வீரர்கள் தயாராக இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோவில், இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து, ஜனவரி 3ஆம் தேதி சந்திப்போம் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.