புத்தாண்டின் முதல் நாளை சிறப்பாக வரவேற்க கூகுள் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள மக்கள் புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி வருகின்றனர். கண்கவர் வானவேடிக்கை, வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்ட கட்டிடங்கள், என புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
பட்டாசு வெடித்து இந்த ஆண்டை மக்கள் வரவேற்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டை சிறப்பாக வரவேற்க கூகுள் புதிய டூடுலை வெளியிட்டுள்ளது. வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த நாள், சாதனையாளர்களின் பிறந்த நாள் உள்ளிட்ட பல முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் கூகுள் நிறுவனம் சிறப்பு டுடூல் வெளியிடுவது வழக்கம்.
இந்தாண்டு புத்தாண்டிற்கு முந்தைய நாளிலேயே டூடுலை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் புத்தாண்டு நாளான இன்று புதிய டூடுலை வெளியிட்டுள்ளது. அதன்படி அந்த டூடுலில் google என்ற சொல்லுக்கு மேல் 2024 இடம்பெற்றுள்ளது. கூகுளில் உள்ள ‘o ’ என்பது மட்டும் ஸ்பார்க்ளிங் உலக உருளை போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
கூகுள் என்ற வார்த்தையில் உள்ள எழுத்துகள் மேல பார்ட்டி பார்ப்பர்ஸ் மின்னுவது போலவும், புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராக இருப்பது போலவும் டூடுல் அமைந்துள்ளது.
1998-ம் ஆண்டில் இருந்து கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு வருகிறது. இதுவரை 4000 கூகுள் டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றாலே பார்ட்டி பாப்பர்ஸ் எல்லாருக்கும் விருப்பமான ஒன்று. கூகுள் அதனைப் புரிந்துகொண்டு மிகவும் அழகான பார்ட்டி பாப்பர்ஸை வெளியிட்டுள்ளது. அது இசையுடன் பார்ட்டி பாப்பர்ஸ் வெடித்து ஸ்கிரீன் முழுவதும் பல வண்ணங்களில் ஒளிர்கிறது.