ராஜஸ்தானில் ‘பாலைவன சூறாவளி 2024’ என்கிற பெயரில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே கூட்டு இராணுவப் பயிற்சி, நாளை முதல் நடைபெற உள்ளது.
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன. இப்பயிற்சிக்கு ‘பாலைவன சூறாவளி 2024’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பயிற்சிராஜஸ்தான் மாநிலத்தில் நாளை முதல் ஜனவரி 15-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சிகள் நகர்ப்புற நடவடிக்கைகளில் சிறந்த நடைமுறைகளைக் கற்றுக்கொள்வது மற்றும் பகிர்ந்து கொள்வதன் மூலம் இயங்கும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இந்தியாவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸும் இரு பிராந்தியங்களுக்கிடையே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான கலாச்சார, மத மற்றும் பொருளாதார உறவின் அடிப்படையில் வலுவான நட்புறவை கொண்டிருக்கின்றன.
வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, பாதுகாப்புத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தி மற்றும் மேம்பாடு ஆகியவை அடங்கும்.
இப்பயிற்சியின்போது, ஆயுதப் படைகளின் கூட்டுப் பயிற்சிகள், கடற்படைப் பயிற்சிகள், மூலோபாயம் மற்றும் கோட்பாடுகள் பற்றிய தகவல்களைப் பகிர்தல், இடைநிலை ஜெட் ட்ரெய்னர் போன்றவற்றில் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவை இடம் பெறும்.
இந்தியா- ஐக்கிய அரசு எமிரேட் முதல் கூட்டு விமானப்படை பயிற்சி 2008 செப்டம்பரில் அபுதாபியில் உள்ள அல்-தஃப்ரா தளத்தில் நடந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அபுதாபியில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியில் இந்தியாவும் தொடர்ந்து பங்கேற்று வருகிறது.