ஜப்பானின் மேற்கு பகுதியில் இன்று மதியம் 12.40 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜப்பானில் இன்று மதியம் 12.40 மணிக்கு (இந்திய நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் மேற்கு பகுதியில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் அதிர்ந்தன. இதனால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழ வாய்ப்பு உள்ளதாக அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கடலோரப் பகுதிகளில் இருக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
















