கோடைகால மாநிலமான ஸ்ரீநகரில் முன்பு இருந்த 3.4 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையிலிருந்து மைனஸ் 5.2 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
ஜம்மு & காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் நேற்று இரவு மைனஸ் 3.4 டிகிரி வெப்ப நிலை பதிவாகியிருந்தது. இந்நிலையில் இன்று காலை அந்த வெப்பநிலை மைனஸ் 5.2 செல்ஸியஸாக குறைந்துள்ளது.
தெற்கு காஷ்மீரில் உள்ள அமர்நாத் யாத்திரைக்கான அடிப்படை முகாமான பஹல்காமில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 5.7 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
அதேபோல் காசிகுண்டில் மைனஸ் 3.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. கோகர்நாக்கில் மைனஸ் 1.7 டிகிரியும் மற்றும் குப்வாராவில் மைனஸ் 4.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது.
காஷ்மீரில் 40 நாட்களுக்கு மிகவும் கடுமையா குளிர்காலம் நிகழும் இதற்கு உள்ளூரில் சில்லாய் காலன் அல்லது சில்லா-இ-காலன் என்று பெயர்வைத்துள்ளார்.
கடுமையான குளிர்காலத்தில் காஷ்மீரில் உள்ள நீர்நிலைகள், இக்கானிக் தால் ஏரி உட்பட அனைத்தும் உறைந்துவிடும், குழாய்களில் உள்ள நீர் கூட பனியாக மாறிவிடும். அதேபோல் காஷ்மீரில் உள்ள உயர்நம இடங்களில் தான் அதிகமான பனி ஏற்படுகிறது.
காஷ்மீரில் குளிர் காலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ‘ சில்லாய் காலன் ‘ என்பது டிசம்பர் 21 அன்று தொடங்கி ஜனவரி 30 அன்று முடிவடைகிறது. அதனைத் தொடர்ந்து 20 நாட்களுக்கு ‘சில்லாய் -குர்த்’ ஆரம்பம் ஆகிறது. அது முடிவடைந்த பிறகு அடுத்த 10 நாட்கள் ‘சில்லாய் -பச்சா’ ஆரம்பம் ஆகிறது.