அயோத்தி ஶ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா, ஜனவரி 22 அன்று மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பாரதப்பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
இந்த நிலையில், அயோத்தி ஸ்ரீராமர் கோவில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழ், பூஜிக்கப்பட்ட அட்சதையை, அயோத்தி கரசேவைக்கு சென்று வந்த ராம பக்தர்களுக்கு, விசுவ ஹிந்து பரிஷத் கோட்ட இணைச் செயலாளர் முத்துக்குமார், மாவட்ட இணைச் செயலாளர் ரமேஷ்- சிவா ஆகியோர் வழங்கினர்.
மேலும், அயோத்தி கும்பாபிஷேகம் நடைபெறும்போது கோவில் சிறப்பு பூஜைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும், மாலை 6 மணிக்கு வீடுகளில் விளக்கு தீபம் ஏற்றி வழிபடவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.