டெஸ்டில் எப்படி ஆட வேண்டும்: கில்லுக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்!
Mar 15, 2026, 08:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெஸ்டில் எப்படி ஆட வேண்டும்: கில்லுக்கு அறிவுரை வழங்கிய கவாஸ்கர்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 1, 2024, 09:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் 24 வயதான சுப்மன் கில் கடந்த ஆண்டில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 29 ஆட்டங்களில் ஆடி 5 சதம் உள்பட 1,584 ரன்கள் குவித்து கவனத்தை ஈர்த்தார்.

எதிர்பார்க்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் அவர் சோபிக்கவில்லை. அவர் 2 மற்றும் 26 ரன்னில் வேகப்பந்து வீச்சில் வீழ்ந்தார். வெள்ளை நிற பந்தில் ஜொலிக்கும் சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதுவரை 19 டெஸ்டில் ஆடி 2 அரைசதம் உள்பட 994 ரன் எடுத்துள்ளார். கடைசி 7 இன்னிங்சில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.

இந்த நிலையில் அவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் (இந்தியா) டெஸ்டில் எப்படி ஆட வேண்டும் என்பது குறித்து சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

இது குறித்து கவாஸ்கர் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சுப்மன் கில் கொஞ்சம் அதிக ஆக்ரோஷத்துடன் விளையாடுவதாக நினைக்கிறேன். ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆடுவதை காட்டிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு சிறிது வித்தியாசம் உள்ளது. ஆனால் அவர் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டி போன்றே டெஸ்டிலும் அதிரடியாக ஆட நினைக்கிறார்.

குறுகிய வடிவிலான போட்டிக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைநிற பந்தை விட டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய சிவப்பு நிற பந்து காற்றிலும், ஆடுகளத்திலும் வேகமாக நகரும். மேலும் சிவப்பு பந்து அதிகமாக பவுன்சும் ஆகும். அதை மனதில் வைத்து அவர் டெஸ்டிஸ் விளையாட வேண்டும்.

சுப்மன் கில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய போது, அவரது ஷாட்டுகள் எல்லாம் பாராட்டும்படி இருந்தது. மீண்டும் அவர் பார்முக்கு திரும்புவார் என்று நம்புகிறேன். இன்னும் கடினமாக உழைத்து எதிர்காலத்தில் சிறப்பாக ஆடுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் கூறுகையில், ‘சுப்மன் கில் 2023-ம் ஆண்டில் முதல் 9-10 மாதங்களில் நன்றாக ஆடினார். அதன் பிறகு தான் தடுமாறுகிறார். மறுமுனையில் ஆடும் ரோகித் சர்மா போன்ற வீரர்களிடம் அவர் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு வேளை உடல்நலம் பாதிப்பின் (டெங்கு காய்ச்சல்) காரணமாக இந்த தடுமாற்றம் வந்திருக்கலாம்.

சுப்மன் கில்லிடம் சூப்பர் திறமை இருக்கிறது. வருங்காலத்தில் இந்தியாவின் நட்சத்திர வீரராக இருப்பார். 2024-ம் ஆண்டு அவருக்கு நன்றாக அமையும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Tags: CricketerSunil Gavaskar
ShareTweetSendShare
Previous Post

2023 : அதிக வசூலை குவித்த தமிழ் திரைப்படங்கள்!

Next Post

யு.பி.ஐ., பரிவர்த்தனை மதிப்பு உயர்வு !

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies