2023ம் ஆண்டு டிசம்பரில் யு.பி.ஐ., பரிவர்த்தனை மதிப்பு 18.23 லட்சம் கோடி ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் 2023 டிசம்பர் மாதத்தில் 1200 கோடி யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மொத்த வர்த்தக மதிப்பு 18.23 லட்சம் கோடி ரூபாய். முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் பரிவர்த்தனை எண்ணிக்கை 54 சதவீதம் அதிகம். அதேபோல் முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வர்த்தக மதிப்பு 42 சதவீதம் அதிகம் ஆகும்.
கடந்த 2022- 23ம் நிதியாண்டில் 8,375 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இது கடந்த 2017- 2018ம் நிதியாண்டில் 92 கோடி யுபிஐ பரிவர்த்தனைகளாக இருந்திருக்கிறது. இதனால் யுபிஐ பரிவர்த்தனை கடந்த ஐந்து ஆண்டுகளில் 147 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.