தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரிய முன்னாள் சுற்றுச்சூழல் பொறியாளரின் ரூ.4.71 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளராக பணியாற்றியவர் பன்னீர் செல்வம். இவர் மீது ஊழல், மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் அவருக்கு சொந்தமான ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கியுள்ளது. இதில் ரூ.1.12 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்கள், மற்றும் ரூ.3.59 கோடி கணக்கில் வராத பணம்,மற்றும் தங்க காசுகள், தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவைகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது .