விஜய் ரசிகர்களுக்கு புத்தாண்டு பரிசு தரும் விதமாக ‘தி கோட்’ படத்தின் இரண்டாவது போஸ்ட்டரை வெளியிட்டது படக்குழு.
நடிகர் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 68. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி என்கிற இளம் நடிகை நடித்து வருகிறார். இவர் தமிழில் இதற்கு முன்னர் கொலை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்தவர், இவருடன் பிரசாந்த், பிரபுதேவா, பிரேம்ஜி, வைபவ், நிதின் சத்யா, சினேகா, லைலா, யோகிபாபு, ஜெயராம், மைக் மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2023ஆம் ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31ஆம் தேதி படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்தின் பெயர் ‘ தி கிரேடஸ்ட் ஆப் ஆல் டைம்’ (Greatest Of All Time) என்று வெளியிடப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து நேற்று இப்படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஒரு அதிவிரைவு பைக்கில் பறந்தபடி இரண்டு விஜய் துப்பாக்கியால் சுடுவது மாதிரியான போஸ்டர் இடம் பெற்றுள்ளது.