ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்!
Oct 16, 2026, 03:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு: அமித்ஷா தலைமையில் இன்று உயர்மட்டக் கூட்டம்!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Jan 2, 2024, 11:12 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த உயர்மட்டக் கூட்டம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் சமீப காலமாக தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்திருக்கிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் காவல்துறை டி.எஸ்.பி., 2 இராணுவ மேஜர்கள், இராணுவ வீரர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் தீவிரவாதிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு நிலைமை மற்றும் வளர்ச்சிப் பணிகளின் வேகம் குறித்து ஆய்வு செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, தலைமைச் செயலாளர் அடல் டுல்லோ, டி.ஜி.பி. ஆர்.ஆர்.ஸ்வைன், துணை இராணுவப் படைகளின் தலைவர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஏஜென்சிகள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளாக அமலில் உள்ள மத்திய அரசின் ‘ஜீரோ டெரர்’ திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதேபோல, சமீபத்தில் பூஞ்ச் ​​மற்றும் ரஜோரியில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தின்போது, ரஜோரி மாவட்டத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள குகைகளில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விரிவான அறிக்கையை பாதுகாப்பு முகமைகள் சமர்ப்பிக்கும் என்று கூறப்படுகிறது.

மத்திய அரசின் தீவிரவாத எதிர்ப்பு நிறுவனமான என்.ஐ.ஏ.வின் டைரக்டர் ஜெனரல் (டிஜி) மாநிலத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்து ஏஜென்சியின் நடவடிக்கை குறித்த அறிக்கையையும் சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் 2026-க்குள் ‘ஜீரோ டெரர்’ திட்டத்தை முழுமையாக செயல்படுத்த மோடி அரசு இலக்கு நிர்ணயித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Amit Shahjammu kashmirmeetingTodaysecurity arrangements
Share
Tweet
SendShare
Previous Post

பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்!

Next Post

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – 30 பேர் உயிரிழப்பு!

Related News

4 நாட்கள் தொடர் விடுமுறை – விமான பயண கட்டணம் பன்மடங்கு உயர்வு!

திருப்பதி கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாள் உற்சவம் கோலாகலம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகத்தின் 6 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்!

டெல்லியில் நடைபெறும் ராம்லீலா நிகழ்வு – ராவணன், கும்பகர்ணன் உள்ளிட்டோருடன் சேர்த்து கரப்பான் பூச்சியின் 30 அடி உயர உருவபொம்மையும் எரிக்க முடிவு!

SIR-ல் விடுபட்ட பெயர்களை சேர்ப்பதற்கான சிறப்பு சுருக்​கத் திருத்​தம் – இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு!

அரசுப் பேருந்தின் டிஜிட்டல் ரூட் போர்டில் சர்ச்சை வாசகங்கள் – 5 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முருகன் பாடல் பாடிய இஸ்லாமிய சிறுமிக்கு மிரட்டல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

செல்போன் அழைப்புகளின்போது அழைப்பவரின் பெயர் – நவம்பர் 1 முதல் கட்டாயம்!

பழனியில் இடி, மின்னலுடன் ஒரு மணி நேரம் கனமழை!

சங்கரன்கோவிலில் கனமழை – கோயிலுக்குள் புகுந்தது மழை நீர்!

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை!

மதுரையில் ஒரு மணிநேரம் கொட்டித்தீர்த்த மழை!

அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் – வானிலை மையம் எச்சரிக்கை!

தொடங்கியது வடகிழக்கு பருவ மழை – 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்!

ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா விருப்பம் – பிரதமர் மோடி

சபரிமலை மெய்நிகர் வரிசை தரிசன கட்டணம் – ரூ.10 ஆக உயர்த்த தேவசம் போர்டு முடிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies