ஜூனியர் என்.டி.ஆர் ஜப்பானில் இருந்து இப்போது, தான் திரும்பியதை உறுதிப்படுத்தியுள்ளார், அதே நேரத்தில் நாடு பூகம்பத்தால் பாதிக்கப்பட்டது குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் விடுமுறையில் இருந்தார் என்று கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று ஏற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதுவரை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி அலைகள் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்பத்தினர் அடிக்கடி வெளிநாடு செல்வார்கள். இந்த ஆண்டு, அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஜப்பானில் கழித்தார்.
Back home today from Japan and deeply shocked by the earthquakes hitting. Spent the entire last week there, and my heart goes out to everyone affected.
Grateful for the resilience of the people and hoping for a swift recovery. Stay strong, Japan 🇯🇵— Jr NTR (@tarak9999) January 1, 2024
நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜப்பானில் இருந்த ஜூனியர் என்டிஆர், தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ” ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ச்சியடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும். ஜப்பானில் இருப்பவர்கள் வலிமையாக இருங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
நேற்று ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தார்.